Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி




 ( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன நேற்று (19) புதன்கிழமை 
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணி் மனையின்  தொற்றா நோய் பிரிவு  லயன்ஸ் கழகபிரிவு இணைந்து லயன்ஸ் கழகத்தின்  முழுமையான அனுசரணையுடன்  இடம் பெற்றது. 

  இந்த நிகழ்வின் ஆரம்ப கட்டத்தில்  நீரழிவு நோய் சம்மந்தமான  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து  புறப்பட்ட நடை பவனியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடைந்து
 அங்கு ஒரு ஒன்று கூடலும் இடம் பெற்றது.

இந்த ஒன்று கூடலில் 
தொற்றாநோய் பிரிவு வைத்திய அதிகாரி மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இ. உதயகுமாரின் அறிமுக உரையினை தொடர்ந்து
லயன் ஏ.செல்வேந்திரனின் வரவேற்புரை இடம் பெற்றது.  இதனைத் தொடர்ந்து  மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர் லயன் கே.லோகேந்திரன் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் இ.முரளீஸ்வரன் மற்றும் மருத்துவர் எம்.ருதேசன்      தொற்றாநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி மட்டக்களப்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அதனை தொடர்ந்து மருத்துவர் முரளீஸ்வரன்  உட்பட மற்றும் சில பிரமுகர்களின் சேவைகள் பாராட்டப்பட்டு
கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உத்தியோகத்தர்கள் மற்றும்  லயன்ஸ் கழக உறுப்பினர்கள் லியோக் கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும்  பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின் மூலம் நீரழிவு நோய் வருவதை முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கான முக்கியத்துவம் பற்றியும் அதற்குரிய வைத்திய ஆலோசனைகள் பற்றியும் முக்கியமான விடையங்கள் பலவும் சிறப்பாக விளங்கப்படுத்தப்பட்டன.











No comments