Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக உதவி தவிசாளர் இஸ்மாயில் நியமனம் !




( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளராக உதவித் தவிசாளர் எம் எச் எம்.இஸ்மாயில்  நியமிக்கப்பட்டுள்ளார் .

அவர் நேற்று  (25)  செவ்வாய்க்கிழமை காரியாலயத்திற்கு சென்று பதவியை பொறுப்பேற்றார்.

தவிசாளர் சு. பாஸ்கரன் 
வெளிநாடு செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதில் தவிசாளராக இஸ்மாயில் உள்ளூராட்சி ஆணையாளரால் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை நியமிக்கப்பட்டுள்ளார் .

பதவியேற்பு நிகழ்வில் சபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் சபை உறுப்பினர்களான றனீஸ் மற்றும் பர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாளிகைக்காடு அமைப்பாளரான இஸ்மாயில் இம்முறை உதவி  தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பிரதேச சபை வரலாற்றில் மூன்று சபைகளில் உறுப்பினராக இருந்த ஒரேயொரு மூத்த உறுப்பினர் இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments