க.பொ.த. (உயர் தர) பரீட்சை ஒத்திவைப்பு!!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, தற்போது இடம்பெற்று வரும் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சையை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றும் நாளையும் ஆகிய இரு தினங்களுக்கு பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே அறிவித்துள்ளார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்..
No comments