சர்வதேச அழகு கலைத்திறன் நிறுவனத்தில் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் (International Beauty Artistry Campus) மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பயிலுநர்களினால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பெண்கள் கண்காட்சியும் சர்வதேச அழகு கலைத்திறன் கெம்பஸின் பணிப்பாளர் ஜீனத்துல் பாஸீலாவின் தலைமையில் காரைதீவில் இன்று (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான, எஸ்.எல்.டி.பி கொள்கைப்பரப்பு செயலாளர் யூ.எல்.என். ஹுதா, பிரைனி கல்லூரி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். பரீட்கான் ஆகியோர் பிரதான அதிதிகளாக கலந்து கொண்டு மணப்பெண் அலங்காரம் பயிற்சியை பூர்த்தி செய்த பயிலுநர்களுக்கான பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம். அரூஸ், டீ.டீ. கல்விநிலைய செயற்பாட்டு பணிப்பாளர் எம். இம்தியாஸ் உட்பட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வை டியூப் லீடர் பிரதானி ரோஷன் அஸ்ரப் தொகுத்து வழங்கினார்.
No comments