Column Left

Vettri

Breaking News

கல்முனையில் பிரஜா சக்தி தவிசாளர்களுக்கான நியமனக் கடிதங்கள்! பிரதி அமைச்சர் வஸந்த வழங்கி வைப்பு




 ( வி.ரி. சகாதேவராஜா)


கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு  நேற்று முன்தினம்  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸவினால் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன

கல்முனை வடக்கு பிரதேச பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இத்தவிசாளர்கள் இணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல் நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக தொண்டர் அடிப்படையில் கடமையாற்றுவார்கள்.








No comments