Column Left

Vettri

Breaking News

கலைஞர் மோகனின் 38 வது இசைத்தட்டு வெளியீடு!




 ( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவைச் சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர் இரா.இராஜமோகனின் 38 வது இசைத்தட்டு வெளியீடு நேற்று காரைதீவில் நடைபெற்றது .


காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பவள விழா நடைபவனியை மையமாக வைத்து "காரைதீவு புகழ் பாடல்" எனும் மகுடத்தின் கீழ் ஆக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாக இந்த இசைத்தட்டு அமைய பெற்றிருக்கிறது.

முதலாவது இசைத்தட்டை காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணனிடம் பாடலாசிரியர் இராஜமோகன் வழங்கி வெளியிட்டு  வைத்தார்.   
அச் சமயம் கலாசார உத்தியோகத்தர்களான  சுதர்சன் சுரேஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.

குறித்த பாடல்களை ஆக்கியதோடு மட்டுமல்லாமல் பாடியுமிருக்கும்
கலைஞர் ராஜமோகன் கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுபவர். கடந்த பல வருடங்களாக ஆன்மீகம் தொடர்பான பாடல்களை ஆக்கி பாடி 37 இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Subscribe Us