Column Left

Vettri

Breaking News

மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 30 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள இரு வீதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக 60 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள நான்கு வீடமைப்பு




 வி.சுகிர்தகுமார்  


 மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 30 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள இரு வீதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக 60 இலட்சம் ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள நான்கு வீடமைப்பு வேலைத்திட்டங்களும் இன்று (04)ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து அலிக்கம்பை கிராமத்தில் ஒரு வீதியும் கண்ணகிகிராமத்தில் ஒரு வீதியும் உள்ளடங்க மீள்குடியேற்ற அமைச்சினால் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வருமானம் குறைந்த அலிக்கம்பை கிராமத்தில் 3 வீடுகளும் கண்ணகிகிராமத்தில் ஒரு வீடும் என நான்கு வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹுசைன்டீன் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ஆர்;.ரதீசன் உள்ளிட்ட பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக சீரான பாதையின்மை மற்றும் வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அளிக்கம்பை கண்ணகிகிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் வீதியமைப்பு வீடமைப்பினை முன்னெடுத்துவரும் அரசுக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.


No comments