Column Left

Vettri

Breaking News

கண்ணகிகிராமத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கை!!




 வி.சுகிர்தகுமார் 

பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பணியை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு பாடசாலையின் கல்விச்சமூகம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக கண்ணகி;கிராமத்தில் பாடசாலை செல்லாத இனங்காணப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமாரின் அறிவுறுத்தலுக்கு அமைய கோட்டக்கல்விப்பணிப்பாளர் க.கமலமோனதாசனின் வழிகாட்டலில் திருக்கோவில் கல்வி வலயத்தின் முறைசாராக்கல்வியின் ஆசிரிய ஆலோசகர் வி.மேகவண்ணன் தலைமையில் ஆசிரியர்களான சி.உமாகாந்தன் ச.ரகுவரன் ஆகியோர் களப்பரிசீலனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

பாடசாலை செல்லாத பெற்றோர்களை நேரடியாக சந்தித்த அதிகாரிகள் பெற்றோர்களுக்கு இறுக்கமான கட்டளை பிறப்பித்ததுடன் அவ்வாறான குடும்பங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அரசினால் வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டிய நிலைவரும் எனவும் எச்சரித்தனர்.
கண்ணகிகிராமத்தில் பாடசாலை செல்லாத 16 வயதிற்குட்பட்ட 30  மாணவர்கள் வரையில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளமை 

No comments