Column Left

Vettri

Breaking News

மகாஓயா பகுதியில் இறந்த யானை குறித்து விசாரணை!!




பாறுக் ஷிஹான்

மகாஓயா பகுதியில் இறந்த யானை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேச செயலத்திற்கு உட்பட்ட  சமகிபுர  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(26) யானை  இறந்த நிலையில் மீட்கப்ட்டது.

அப்பகுதியில் உள்ள  சோளம் உற்பத்தி செய்யும் விவசாயக் காணியில்   விழுந்து  யானை இறந்தமை குறித்து விசாரணைகளை வனவிலங்கு கால்நடை பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த காட்டு யானையின் முன் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மிகவும் சிரமத்துடன் நடந்து வந்ததாகவும்  பின்னர் இரண்டு நாட்கள் அம்பாறை வனவிலங்கு கால்நடை பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்ப குமார தலைமையிலான குழுவினரால்  சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த யானை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கியதாக மக்கள்  தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த  யானை   கடந்த சனிக்கிழமை(25) மாலை திடிரென  இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

No comments