Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களால் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு வீதி நாடகம்!!




 வி.சுகிர்தகுமார்    

 உலக உளநல தினத்திற்கு இணைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களால் கல்விக்கு தடையாகவுள்ள பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு வீதி நாடகம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று(17) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்களுடன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் தொலைபேசி பாவனை அதன் ஊடாக இடம்பெறும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் மாணவர்களை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் தத்துரூபவமாக நடித்து காண்பித்தனர்.
அத்தோடு பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நடைமுறைகள் பற்றியும் மாணவர்களை நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக நாடகத்தின் ஊடாக விளக்கமளிக்கப்பட்டது.
15 நிமிடம் வரை நீடித்த முன்மாதிரியான இந்நாடகத்தின் இறுதியில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்களின் சார்பில் மாணவர்களுக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

No comments