விபுலானந்தாவில் சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா!!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா நேற்று முன்தினம் மாலை காரைதீவு கடற்கரையில் மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும் ரம்யா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக காரைதீவின் பிரபல தொழிலதிபர் விஸ்வநாதன் சந்திரமோகன் மற்றும் பாடசாலைப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கடற்கரையில் சிறுவர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விநோத உடைப்போட்டியும் ஜனரஞ்சகமாக நடைபெற்றது.
மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments