Column Left

Vettri

Breaking News

வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக நியமனம்!!




நூருல் ஹுதா உமர்

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள் (14.10.2025) முதல் அமுலாகும் வகையில் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். வி. ஜெகதீசன், இதற்கு முன்பு அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று (14) தமது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசு நிர்வாகத்தில் சிறப்பான சேவையைப் புரிந்துள்ள வி. ஜெகதீசன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் திறன்பட கடமையாற்றியுள்ளார். அவரின் நியமனம், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments