Column Left

Vettri

Breaking News

கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் நியமனம்!?




பாறுக் ஷிஹான்

கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில்    வருடாந்த இடமாற்றம் அடிப்படையில் இன்று (22) அவர் தனது கடமையை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


1999.08.16 இல் கல்முனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு அரச சேவையை ஆரம்பித்த இவர் 2009.06.22 இல் வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை திட்டமிடல் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு
2010.08.16 தொடக்கம் 2016.01.19 வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றினார்.


இதன் பின்னர் 2016.01.20 தொடக்கம் 2022.06.15 வரை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய இவர்
2022.06.16 தொடக்கம் தற்போது வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில்
தற்போது முதல் உடனடியாக செயற்படும் வண்ணம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தென்கிழக்கு பல்கலைக்கழக வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான (BBA) இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா (PgDDS), கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிராந்திய அபிவிருத்தி மற்றும் திட்டமிடலில் முதுகலை (MRDP), தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்துள்ளதுடன் தற்போது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி  பட்டப்படிப்பைப் (LLB) பயின்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


இந்நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, பிரதேச செயலக கணக்காளர்  கே.எம்.எஸ். அமீர் அலி  ,  பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனூபா நெளபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இருந்து நிர்வாக உத்தியோகத்தர் கே.பீ. சலீம் மற்றும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
மேலும்  கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏலவே கடமையாற்றிய  எம்.ஜெளபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலக புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments