கந்தஷஷ்டி விரதாரம்பம்!!
மகா கந்தசஷ்டி விரதம் 2025
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும். மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு. இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான். முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.
மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள். மாலை அணிந்தோ அல்லது அணியாமலோ இந்த விரதத்தை இருக்கலாம். இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.

No comments