Column Left

Vettri

Breaking News

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!




பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி  சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர்  உறவினர்களிடம் இன்று  கையளிக்கப்பட்டது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை (02) இரவு வேளையில் கனரக வாகனத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி  படுகாயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்  உயிரிழந்தார்.

சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி  சந்தி பகுதியில் 12 கொளனி பகுதியில் இருந்து சம்மாந்துறை நோக்கி  கனரக வாகனத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை  முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின்  கவனக் குறைவால் விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் இவ்வாறு  உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்மாந்துறை 114  மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய அப்தல் நஸீர் முகமட் அஸீல்  ஆவார்.

சம்மாந்துறை மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸார் கைதுசெய்து உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைய கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஜி.கே.பி பெரேரொ  சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பொறுப்பதிகாரி சகிதம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

விபத்தில் தலையில் ஏற்பட்ட பாரிய  காயம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில்  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப் பணித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா நெறிப்படுத்தில் சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான சாரதியை பொலிஸார்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் திங்கட்கிழமை(6) திகதி வரை விளக்கமியலில் வகை;மாறு நீதிவான் உத்தரவிட்டார்.   

No comments