Column Left

Vettri

Breaking News

மண்சரிவு அபாய எச்சரிக்கை !!




 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (20) இரவு 09.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;

பதுளை மாவட்டம் : ஹல்தும்முல்ல, பசறை

கொழும்பு மாவட்டம் : சீதாவாக்கை 

காலி  மாவட்டம் :  நெலுவ, எல்பிட்டிய, நாகொடை

கண்டி மாவட்டம் :  உடுநுவர, தெல்தொட்ட, தொலுவ, பஹததும்பர, பஹதஹேவாஹெட, கோரளை

கேகாலை மாவட்டம் :  புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, ருவன்வெல்ல, வரகாப்பொல, இரம்புக்கனை

குருணாகல் மாவட்டம் : நாரம்மல, அலவ்வ, ரிதிகம, மல்லவபிட்டிய

மாத்தறை மாவட்டம் : யடவத்த, உக்குவெல, பல்லேபொல, லக்கலை, நாவுல, ரத்தொட்ட

நுவரெலியா மாவட்டம் : வலப்பனை, அம்பகமுவ, நோர்வுட், ஹங்குரன்கெத்த

இரத்தினபுரி மாவட்டம் :  கலவானை, இம்புல்பே, எஹெலியகொட

No comments