Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால!!




பாறுக் ஷிஹான்


சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை  நடைபெற்றது.

இதன்போது  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத் ஆகியோர் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர  அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல   அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார  கலந்து சிறப்பித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாணம்   மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் அத்தியட்சகர் இதர பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்  சரோஜா' என்ற தொனிப் பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பில் ஸ்ரிக்கர் முச்சக்கரவண்டிக்கு ஒட்டும் நிகழ்வும் அங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மற்றுமொரு நிகழ்வு பொத்துவில் கோமாரி  செல்வபுரம் கிராமத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உதவி செய்துள்ளனர்.

இதன் அங்குரார்ப்பணவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித்  
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


பொலிஸ் திணைக்களத்தின் ஓய்வு நிலை ஊழியர்களின் நிதியினூடாக அமைக்கப்பட்ட 5000 l சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொகுதி மக்கள் பாவனைக்காக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இ அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments