Column Left

Vettri

Breaking News

இறக்குமதி செய்யப்பட்ட 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி!!




 உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் மற்றுமொரு தொகுதி வெள்ளி, சனிக்கிழமைகளில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உணவுக் கொள்கை, பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நாட்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் என்பதுடன், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு 10 சதவீதம், அதாவது, சுமார் 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.

No comments