196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை விமான சார்ஜன்ட் கைது!!
196 கிலோ கேரள கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை விமான சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
196 கிலோகிராம் 218 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த தொம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தொம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்யும், தற்போது இந்த நாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான செம்புக்குட்டி ஆராச்சிகே திலான் தனுஷ்க லக்மாலின் மைத்துனர் ஆவார். இந்த சந்தேக நபர், ரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் விமான சார்ஜனாகப் பணியாற்றி 2022 ஜனவரியில் ஓய்வு பெற்றவர்.
No comments