Column Left

Vettri

Breaking News

சட்டவிரோதமாக 3000 வௌிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த நபர் கைது!!




 நாட்டுக்கு சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த, வெளிநாட்டுப் இலங்கை பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (05) இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

44 வயதான குறித்த புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர், ரூ. 45 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளை 2 பயணப்பொதியில் மறைந்துவைத்து கடத்தியுள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் இன்று (05) அதிகாலை 5.25 மணிக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளார்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, அவரது பயணப்பொதிக்குள் இருந்து சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவரது பயணப்பையினுள் இருந்து 30,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 150 அட்டைப்பெட்டிகள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒக்டோபர் 08 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments