இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றி வந்த வேலுப்பிள்ளை விஜயபவா புதிய அதிபராக ( பதில்) தனது கடமையை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. A. சஞ்சீவன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று (27.10.2025) காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் செல்லத்துரை மணிமாறன் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரதி அதிபராக கடமையாற்றி வந்த வேலுப்பிள்ளை விஜயபவா புதிய அதிபராக ( பதில்) தனது கடமையை கோட்டக் கல்விப் பணிப்பாளர்
திரு. A. சஞ்சீவன் அவர்களின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிபளோமா( விவசாயம் ), தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமாணி (B.Ed Hons )பட்டத்தையும், இலங்கை திறந்த பல்ககலைக் கழகத்தில் முதுமாணி பட்டத்தையும்(M. Ed) பெற்றுக் கொண்டார். மேலும் உயர்தர மாணவர்களுக்காக விவசாய விஞ்ஞானம் மற்றும் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் போன்ற பாடங்களுக்காக பல நூல்களை அகில இலங்கை ரீதியாக வெளியீடு செய்த நூலாசிரியருமாவார். இவரது சேவைக் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




No comments