11 மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம்!
தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அதிகரிப்பு காணப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 41,192 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் வலியுறுத்துகிறது.
No comments