அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நீதி கோரி உண்ணாவிரத போராட்டம்....!!
தம்பிலுவில்
நிருபர்...
தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில்....
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய சந்தை க்கு முன்பாக செம்மணி மனிதபுதை குழிக்கு சர்வதேச நீதி கோரியும் கடந்த காலங்களில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் கவனையீர்ப்பு உண்ணாவிரதப்போராட்டம் 2025/09/27 திகதியில் இருந்து ஆரம்பமாகி இன்றைவரை இடம்பெற்று வருகின்றது....
இவ் போராட்டமானது 2025/10/01 வரை குறித்த நீதி கோரிய உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி அவர்கள் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்...
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கை அரசின் நம்பிக்கை இல்லை எமக்கு சர்வதேச நீதி வேண்டும் எனவும் காணமல் செய்தவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்....
No comments