சாய்ந்தமருது உணவகங்களில் சுகாதார குறைபாடுகளை கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள்- சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன்!!
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொண்டனர். இதன்போது சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள், மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தரமற்ற உணவுப் பொருட்கள், உணவு சேமிப்பு மற்றும் தயாரிப்பு பகுதிகளில் காணப்பட்ட சுகாதாரமின்மை என பல பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.
இக்குறைபாடுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், வழக்குத் தாக்கல் செய்வதற்கான பணிகள் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள், பொது மக்களிடம் உணவகங்களில் உணவருந்தும் போது அங்குள்ள சுகாதார நிலையை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ஏதேனும் சுகாதார குறைபாடுகள் கண்டால் உடனடியாக சுகாதார பிரிவுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொண்டார்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் பல தடவைகள் அறிவிக்கப்பட்டிருந்தும் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பாவிக்க முடியாத சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் நலன்கருதி பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பணிப்பாளர் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது .

No comments