கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த இளைஞர் கைது!!
கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் யாழ். நாவந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்
கைது செய்யப்பட்ட. இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்டமேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வருகின்றது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments