அம்பாறை - காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வு!!
பாறுக் ஷிஹான்
அம்பாறை - கல்முனை காரைதீவு இணைக்கும் காரைதீவு பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வு சனிக்கிழமை (20) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர் விமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தோழர் வசந்தபியதிஸ்ஸவும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து ரத்துவத்தை,மஞ்சுல ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பாலமானது சுமார் 90 வருடம் பழமை வாய்ந்த பாலம் என்பதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய இப்பாலமானது புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கமைய இப்பாலம் சுமார் 247 மில்லியன் நிதி உதவி ஊடாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி. அலியார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்,தேசிய மக்கள் சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments