Column Left

Vettri

Breaking News

"தியாகிகள் சாகலாம் தியாகங்கள் சாகாது" காரைதீவில் திலீபனின் நினைவு தினத்தில் ஜெயசிறில் !!




( வி.ரி. சகாதேவராஜா)

தியாகிகள் சாகலாம் தியாகங்கள் சாகாது.
அதுபோல தியாகி திலீபனின் தியாகம் என்றும் உயிர் வாழும்.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற தியாகி திலீபனின் 38 வது நினைவு தினத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

தியாகி திலிபனின் 38  வது ஆண்டு நினைவு நாள்  நேற்று 25/09/2025  வியாழக்கிழமை காரைதீவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இன்று தியாகி திலீபன் உயிருடன் இருந்தால் அவருக்கு வயது 62.அன்று 1987, செப்டம்பர்,26,ல்..!
இருபத்தி மூன்று வயது (23) இளைஞன். 12 தினங்கள் 
உண்ணா நோன்பிருந்து தாயகத்திற்காக உயிர் நீத்தான்
இன்று 38, ஆண்டுகள் இந்த தியாகம் நடந்து..!
அவன் உயிரோடு இன்று இருந்தால்..!
ஒரு வைத்தியநிபுணராய்..!                  திருமணம் முடித்து..!
ஐந்தாறு பிள்ளைகளுடன் நன்றாய் வாழ்ந்திருப்பான்.!
அவரின் பிள்ளைகள் கூட நல்ல நிலையில் இருந்திருப்பார்கள் அல்லவா..?

சிலவேளை .....!                                                                                     உலகத்தில் மதிக்கத்தக்க ஒப்பற்ற தலைவனாக கூட உயர்ந்திருப்பான்.!
அரசியல் தலைவனாகவும் ஆகி இருப்பான்.!
புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ்ந்தும் இருந்திருப்பான் அல்லவா?

அப்படி அவன் நினைக்கவில்லை..!
தமிழ் இனத்தையும், தமிழ் மண்ணையும், தமிழர் உரிமையையும் நேசித்தான்..!
அடிமைவாழ்வை எதிர்த்தான்.!
கொடுமைகளை கண்டு கொதித்தான்!
கொள்கையுடன் எழுந்து நின்றான்.!
அதனால்..!
எமக்காக எமது உரிமைக்காக உணவைத்தவிர்த்து 12, தினங்கள் பட்டினியாய் பசியோடு இருந்து தியாகத்தால் உயிர்துறந்தான்!
சரித்திரத்தில் இடம் பிடித்தான்.!
தாயகத்தின் கனவுடனே விடைபெற்றான்!
ஆம்..!
தியாகி திலிபன் மறைந்து 38, வருடங்கள் கடந்தாலும் அவனின் தியாகம் மறையாது.!
மாறாது
வரலாறுகளை மறந்து வாழ்க்கையில் முன்னேறமுடியாது! என்றார் .

உணர்வார்கள் பலரும் நினைவேந்தலில் பங்கேற்றனர்.

No comments