வீதியின் மத்தியில் ஓட்டை வடிகான்! ஆபத்தானநிலையில் வடிவேல் வீதி; கவனிப்பார் இல்லை; மக்கள் விசனம் !
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு 12ஆம் பிரிவில் உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாக கவனிப்பாரற்று காணப்படுகிறது.
அவர் வீதியில் பயணிக்கும் பயணிகள் வாகனங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் செல்ல வேண்டி இருக்கின்றது . இதுவரை ஏகப்பட்ட விபத்துகள் அங்கு சம்பவித்திருக்கின்றன.
வீதியின் மத்தியில் வடிகான்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அவ்வடிகானின் மூடிகள் பல இடத்தில் உடைந்து பாரிய ஓட்டைகளுடன் காணப்படுகின்றது. அந்த இடத்தில் வாகனங்களில் சில்லுகள் சிக்குகின்ற பொழுது ஆபத்து எதிர் நோக்கப்படுகின்றது .
சில இடங்களில் வீதி தாழ் இறங்கி உள்ளது.
இவ்விதம் சுமார் 100 மீட்டர் தூரம் பாரிய ஆபத்தோடு காணப்படுகின்ற இந்த வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த பொழுதும் யாருமே அதனை கவனிக்கவில்லை . மக்களின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது.
இந்த அரசாங்கத்திலாவது இதனை சீர் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி வாழ் மக்கள் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் .
இதேவேளை, வடிவேல் வீதியின் மத்திய பகுதியில் ஒழுங்கான வடிகானன்மையால் மழை காலங்களில் அருகில் உள்ள குடிமனைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமாக வருகின்றது.
வெள்ளம் பெறும் பொழுது மட்டும் அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதேச செயலாளர் அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலரும் வந்து பார்த்துச் செல்வார்கள் .
ஆனால் வெள்ளம் வடிந்த பின்பு யாரும் இதனைக் கவனிப்பதில்லை என அப்பகுதி மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அருகிலுள்ள ஊர்களில் கொங்கிறீற் வீதிகளுக்கு மேல் கார்பட் அல்லது கொங்கிறீட் போடுகிறார்கள். ஆனால் காரைதீவில் பல வீதிகள் இவ்வாறு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
இவ் வடிவேல் வீதியால் தொடர்ச்சியாக பல வருட காலமாக மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டே வருகின்றார்கள் .
No comments