மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் புனித மைக்கேல் கல்லூரி முன்னணியில்!!
( வி.ரி.சகாதேவராஜா)
நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி
மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் புனித மைக்கேல் கல்லூரி அதிகூடிய 52 சித்திகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
மட்டக்களப்பு நகரப் பாடசாலைகளில் மட்/புனித மிக்கேல் கல்லூரி -52,
மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி -47,
மட்/கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலயம் -42,
மட் /புனித சிசிலியா மகளிர் கல்லூரி -35,
மட் /மெதடிஸ்த மத்திய கல்லூரி -28 எனத் தொடர்கிறது.
மட்டக்களப்பு நகர பாடசாலைகளில் மிகவும் அதிகூடிய புள்ளியாக 180 புள்ளி திகழ்கிறது. அந்த அதிகூடிய 180 புள்ளிகளைப்பெற்ற சாதனை மாணவன் யோகேஸ்வரராஜா பிரணவ் காரைதீவைச் சேர்ந்தவராவார்.
No comments