Column Left

Vettri

Breaking News

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக நிர்வாக உத்தியோகத்தருக்கு பிரியாவிடை




 கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆந் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெறும் மருதமுனை பகுதியை சேர்ந்த முஹம்மது ஹனீபா முஹம்மது றபீக்கிற்காக  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட சேவை நலன் பாராட்டு விழா   இன்று  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில்   இடம்பெற்றது.


இவர் 1992.03.25 ஆந் திகதி தனது அரச சேவையில் இணைந்து கொண்டதுடன்   இலங்கையில் பல பாகங்களில் கடமையாற்றி இறுதியாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் 2009.01.31 முதல் தற்போது வரை  நிர்வாக உத்தியோகத்தராக சிறப்பாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற சகல மக்கள் பொலிஸ் அதிகாரிகள் முதல் உத்தியோகத்தர்கள் வரை குறித்த   நிர்வாக உத்தியோகத்தர்  சேவைக்காலத்தில்  அன்பாக பழகியதுடன்  பொது மக்கள் மற்றும்  பொலிஸாருக்கும்  இடையில் அவரது சேவைக்காலத்தில்   உறவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த நிகழ்வில்  சம்மாந்துறை காரைதீவு சாய்ந்தமருது பெரிய நீலாவணை சவளக்கடை மத்தியமுகாம் பொறுப்பதிகாரிகள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதான  பொலிஸ் பரிசோதகருமான  ஏ.எல்.ஏ. வாஹிட் கல்முனை தலைமையக பொலிஸ்  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதான  பொலிஸ் பரிசோதகருமான   பி.ரி  நஸீர்    மற்றும்  பொலிஸ் பரிசோதகர்கள்  உப பொலிஸ் பரிசோதகர்கள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெறும் நிர்வாக உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன்  தமது   சேவையின் அனுபவங்களையும்  ஓய்வு பெறவுள்ள கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்  பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


தனது 33 வருட கால அரச சேவையில் இருந்து எதிர்வரும்    2025.10.08 ஆம் திகதியுடன் மருதமுனை பகுதியை சேர்ந்த முஹம்மது ஹனீபா முஹம்மது றபீக் ஓய்வு பெற்றுள்ளார்.

அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக  அலுவலகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் உட்பட பொலிஸ் அதிகாரிகள்  முஹம்மது ஹனீபா முஹம்மது றபீக்  அவர்களின் 33 வருட கால அரச பணியின் உன்னத சேவைகள் குறித்து கருத்துரை வழங்கினர்.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக  நிர்வாக உத்தியோகத்தரான அகில இலங்கை சமாதான நீதிவான் மருதமுனை பகுதியை சேர்ந்த முஹம்மது ஹனீபா முஹம்மது றபீக்கிற்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் முதலாவது பெண்  பிள்ளை-சீமா பர்வீன்-பட்டதாரி என்பதுடன் உளவியல் பாடநெறியில் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.இவரது கணவர் ஜவ்பர் பெறோஸ்கான்- மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றுகின்றார்.முகமட் சைன்(மகன்) -திரேசா மர்யம் சர்வதேச பாடசாலையில் ஆங்கில மொழியில் கல்வியை தொடர்ந்து வருகின்றார்.

இரண்டாவது பெண்-பாத்திமா சப்னா (வணிக இளமாணி பட்டதாரி உயர் தேசிய டிப்ளோமா ஆங்கிலம் (ர்Nனுநு) பாடநெறியை நிறைவு செய்து ஆங்கில ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.இவரது கணவர் ஜாவீட் இஷாக் ஜெமீல்   சட்டத்தரணியாக பணியாற்றுகின்றார்.

3 ஆவது பெண் பிள்ளை -மிஸ்-ரீன் சதா-திறந்த பல்கலைக்கழகத்தில்  உளவியல் பாடநெறியை கற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






No comments