சம்மாந்துறை பிரிவில் அக்டோபர் 15 ஆம் தேதி பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பம் !
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை புளக்" ஜே" பிரிவுக்குட்பட்ட வயல்காணிகளில் பெரும்போக பயிர்ச்செய்கை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஆரம்பிப்பது என் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
சம்மாந்துறை புளொக் ஜே திட்ட முகாமைத்துவ பிரிவு விவசாய பிரதிநிதிகளின் ஆரம்ப முன்னோடிக்
கூட்டம் நேற்று (29) திங்கட்கிழமை மாலை
நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜேந்திரா வேல்கஜன் தலைமையில் சம்மாந்துறை பங்களாவடி மண்டபத்தில் நடைபெற்றது .
அங்கு சம்மாந்துறை விவசாய குழு சம்மேளனத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாட் மற்றும் திணைக்கள அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் .
பெரும்போக பயிர்ச்செய்கை விதைப்புக் காலம் அக்டோபர் 15ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 10ஆம் தேதி ஆகும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மூன்று மூன்றரை மாத நெல்லினம் பயிரிடப்பட வேண்டும். காப்புறுதிக் காலம் அக்டோபர் 15ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 10 ஆம் தேதி வரைக்குமாகும்.
இம்முறை பெரும்போகம் 15ஆம் தேதி ஆரம்பமாகி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் தேதி நிறைவடையும்.
இதற்கான நீர் விநியோகத்தை நீர்ப்பாசன திணைக்களம் வழங்க இருக்கின்றது .
விதைப்பு காலத்திற்கு முன்பதாக கால்நடைகளை அப்புறப்படுத்துவது முதல் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
அங்கு விவசாயிகள் மத்தியிலே திரவ உரம் தொடர்பாக பார்க் நிறுவனத்தின் பணிப்பாளர் இரத்தின சபாபதி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் விளக்கம் அளித்தனர் . சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் வித்யாரத்ன இப் புதிய திரவ உரவகை தொடர்பாக விளக்கம் அளித்தார் . ஒருங்கிணைப்பாளர் ஓய்வு நிலை பெரும்பாக உத்தியோகத்தர் மா. சிதம்பரநாதன் கலந்து கொண்டார்.




No comments