Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையில் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி!




( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் முஸ்லிம்களின் பெருந் தலைவர் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபைத் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று (17) புதன்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு சபையின் உப தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாளிகைக்காடு அமைப்பாளருமான எம்எச்எம். இஸ்மாயில் மறைந்த அமைச்சர் அஷ்ரப்புக்கு அனுதாப அஞ்சலி செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த போது அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலாவதாக அனுதாபம் தெரிவித்து  முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்..

இலங்கையிலே தமிழரசு கட்சி தந்தை செல்வா அவர்களினால்  தமிழ் பேசுகின்ற சமூகத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது. அவர் தமிழ் முஸ்லிம் சமூகங்களை அரவணைத்து காத்தார்.

அந்த தந்தை செல்வா வழியில் வந்தவர் தான் தலைவர் அஷ்ரப் அவர்கள்.

வடக்கு கிழக்கில் விடுதலை புலிகள் போராட்ட காலத்திலும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ அவர் பல முயற்சிகளை எடுத்திருந்தார்.
அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்த எமது மண்ணைச் சேர்ந்த வைத்தியர் கதிர்காமத்தம்பி என்பவரும் வெடித்து சிதறியிருந்தார்.
மேலும் அஷ்ரப் காரைதீவு பிரதேச செயலக அமைப்பிலும் ஆதரவாக இருந்தார். மணிமண்டப அமைப்பிலும் பாரிய நிதி வழங்கியிருந்தார்.

இன்று அவரது நேர்மையான அரசியலை இன்றுள்ள சமூகங்கள் கடைப்பிடித்தால் இரு சமூகங்களும் நிம்மதியாக வாழலாம்.
பிணக்குகள் இல்லாமல் வாழ முடியும்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்லோலப்படுகின்றது. வீரமுனை விவகாரமும் அப்படியே.
அவர் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

எனவே அவருக்கும் கதிர்காமத்தம்பி ஐயாவிற்கும் அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். என்றார்.

தவிசாளர் சு.பாஸ்கரன்  உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் அனுதாப உரை நிகழ்த்தினார்கள்.

No comments