அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் நிகழ்வு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...!
நமது சமூகத்தின் கல்வி, சமய மற்றும் சமூக நலத்திற்காக ஆற்றிய முன்னோர்களின் மறுமலர்ச்சியான பங்களிப்புகளை நினைவுகூரும் நோக்குடன் ‘அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின்’ ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம் நியாஸ் தலைமையில் இரண்டாவது நிகழ்வு, நேற்று (2) கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, சமூக முன்னேற்றத்தில் தங்களது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த மர்ஹூம் சேர் ராசிக் பரீத், மர்ஹூம் எச்.எஸ். இஸ்மாஈல், மற்றும் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் புத்திஜீவிகள், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments