Column Left

Vettri

Breaking News

மூன்றாம் இடத்தை பிடித்த மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம்!!




பாறுக் ஷிஹான்

குறித்த போட்டியில்  ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் விடா முயற்சியுடனும் சிறந்த களத்தடுப்புடன் விளையாடி மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டு கழகத்தை   இறுதியில் (03:01) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இச்சுற்றுத் தொடரின் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டு குறித்த ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை தனதாக்கிக் கொண்டது.

அப்துல் அஸீஸ் ரூ சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் 3ம் இடத்தை தெரிவு செய்யும் போட்டி வியாழக்கிழமை இரவு (11)மருதமுனை மசூர் மெளலானா மைதானத்தில்  மின்னொளியில் இடம்பெற்றது.

இப் போட்டியில் மருதமுனை ஈஸ்டன் யூத்  அணியை எதிர்த்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக்கழகம் மோதியிருந்த நிலையில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் 3-1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று இச்சுற்றுத் தொடரின் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டு குறித்த ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசினை தனதாக்கிக் கொண்டது.


மேலும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தோடு இணைந்து அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்தும்
அப்துல் அஸீஸ் ரூ சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் 3ம் இடத்தை தெரிவு செய்யும் போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம் எம் ஹரீஸ்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இறுதிப் போட்டி  வெள்ளிக்கிழமை (12) இரவு  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்த்கது.

No comments