Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு.




( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய 
போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.  

இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் கல்முனை அணியும் மோதின.

காரைதீவு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய கூடைபந்தாட்ட இளைஞர் கழக அணி கூடைப்பந்தாட்ட போட்டியில்  2025 ம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments