Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்ட வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர் !!




 ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர் விஜயம்... 

ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட்டு சினேக பூர்வமான விஐயம் ஒன்றினைமேற்கொள்ளும் முகமாக வாகரை மற்றும் அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையினர்  விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.. .   

ஜே.கே.யதுர்ஷன்

ஆலையடிவேம்பு  கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் இடம்பெறுகின்ற ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை நடவடிக்கைகளை பார்வையிட வருகை தந்தவர்களை ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபையினர் சம்பிரதாய பூர்வமாக வெற்றிலை வழங்கி வரவேற்று சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் ஆலையடிவேம்பு மத்தியஸ்த தவிசாளர் தேசமானிய ஸ்ரீஸ்கந்தராஜா மணிவண்ணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து பி.ப 12.30 மணியளவில் ஆலையடிவேம்பு, வாகரை மற்றும் அட்டாளைச்சேனை  மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் இடையிலான சிநேக பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவு பொருள் வழங்கப்பட்டதுடன் குழு புகைப்படம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் குறித்த நிகழ்வில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம் ஐ.முஹம்மத் ஆஸாத் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments