மாகாணசபைத் தேர்தல் தாமதம்; இந்தியா தலையீடு செய்ய வேண்டும்! – தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்து
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக தேர்தல் நடத்த இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63மில்லியன் டொலர்கள் நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தகதுறைமுகமாக செயற்படுத்த முடியாதென அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன், து.ரவிகரன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேசிய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டன.
No comments