Column Left

Vettri

Breaking News

மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில்!!




 மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று  அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நிச்சயம் நடத்தப்படும். அதற்குரிய சட்டதிருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் தேர்தல் நடத்தப்படும் கால எல்லை பற்றி எனக்கு உறுதியாகக் கூற முடியாது. எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் என்றார்.


No comments