2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் 7 இல் சமர்ப்பிப்பு!!
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை இந்த நிதி ஒதுக்கீட்டு சட்டம் மீதான விவாதம் நடைபெறும். இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவிக்ைகயில், நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை ஆறு நாட்கள் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஒதுக்கீட்டு பிரேரணை மீதான முதல் வாசிப்பு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன்பின்னர் குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும், மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
.jpg)
No comments