2000ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு!!
புதிதாக அச்சிடப்பட்டுள்ள இரண்டா யிரம் ரூபா நாணயத்தாளை புழக்கத்துக்கு விடுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஆக ஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அன்று 2000 ரூபா புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டது. புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறைகளை முன்னெடுத்துள்ளன. இச்செயன்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளூடாக படிப்படையாக நாணயத்தாள் புழக்கத்துக்கு விடப்படும்.மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள்கள், சகல வங்கிகள் மூலமும் தங்குதடையின்றி பயன்படுத்தப்படும். இது குறித்த விபரங்களை அறிந்து கொள்ள, நாணய திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களையோ பின்தொடருமாறும் கேட்கப்பட்டுள்ளது.
No comments