அரசியல் பழிவாங்கல்களைக் கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு -எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்!!
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடிய கூட்டு எதிர்க்கட்சிகள், அரசியல் பழிவாங்கல்களைக் கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகைய பழிவாங்கல்களை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பை ஒருங்கிணைக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவண்ண மற்றும் சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டனர்.
No comments