கொக்கட்டிச்சோலையில் கருங்கல்லால் ஆலயம் புனரமைக்கும் பணி ஆரம்பம் !
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தின் கருவறை மற்றும் மண்டபம் கருங்கல்லால் அமைக்கும் வேலைகள் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டலுடன் ஆரம்பமானது .
இதற்கான கருங்கற்கள் இந்தியா மற்றும் மன்னாரில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள், சிவஸ்ரீ மு கு. அமிர்தலிங்க குருக்கள்
சிவஸ்ரீ மு கு. சபாரெத்தினக் குருக்கள்
ஆலய குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்க குருக்கள் ஆசியோடு நிகழ்வு ஆலய கருவறையில் ஆரம்பமானது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் வண்ணக்கர் இ. மேகராசா அதிபர் தலைமையிலான வண்ணக்குமார் பரிபாலன சபை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
No comments