சமுர்த்தி கருத்திட்ட உத்தியோகத்தர் சீலனுக்கு பிரியாவிடை
( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பிரிவில் கருத்திட்ட உத்தியோகத்தராக கடமைபுரிந்து தற்போது லாகுகல பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் எஸ்.புண்ணியசீலனுக்கான பிரியாவிடை நிகழ்வு சமுர்தி பிரிவின் ஏற்பாட்டில் தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
உத்தியோகத்தர் புண்ணியசீலனின் சேவையைப் பாராட்டி பலரும் வாழ்த்துரை வழங்கினர். அவரது பன்மொழிப் புலமை பிரதேச செயலகத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது.
நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த் ,நிர்வாக உத்தியோகத்தர் டி.மங்களா , சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எம்.கண்ணதாசன், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சசுயகுமார், தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வலய வங்கி உதவி முகாமையாளர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்
.
.
No comments