கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் திறப்பு விழா
கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் மற்றும் இவ்வாண்டுக்கான பரிசளிப்பு விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
பாடசாலையின் அதிபர் சோ. இளங்கோபன் தலைமையில் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் பூரண அனுசரணையுடன் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் ஸ்தாபகர் பத்மநாதன் நடேசன் அய்யா விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்
மேலும் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திர குமார் மற்றும் சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையின் அங்கத்தவர்கள் ஆலய அறங்காவலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளையினால் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான நுழைவாயில் திரை நீக்கமும் 2024 ம் ஆண்டு க.பொ.த சாதாண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளினை பெற்ற மாணவர்கள் இவ் அமைப்பினரால் வெள்ளிக்கிழமை(22) பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன . பாடசாலை நிர்வாகம் விளையாட்டு கழகங்கள் சமூக அமைப்புகள் மூலம் ப.நடேசன் ஐயா அவர்களுக்கு மகத்தான கெளரவம் கோரக்கர் மண்ணில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments