Column Left

Vettri

Breaking News

140 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றிய அம்பாறை பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு!!




பாறுக் ஷிஹான்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள்  பணம் மற்றும் வாகனங்களுடன் 2 சந்தேக நபர்களை  அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (21)  இரவு  கொழும்பு மாவட்டம் ராகம பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  கெந்தலியத்த வீதியில் உள்ள வீடு ஒன்றினை  அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்     சுற்றிவளைப்பு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.

இதன்போது  ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சமீன் ஹுசைன்  சந்தேக நபரும்  அம்பாறை பகுதியில் போதைப்பொருட்களை விநியோகிக்கும்  உகண பகுதி வேரங்கெட்டகொட சேர்ந்த 21 வயதுடைய தருஷ லக்மால்  சந்தேக நபரும் பொலிஸாரினால் கைதாகினர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் மற்றும் வாகனங்களை கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

 
பிரதான சந்தேக நபரின் வீட்டில் காணப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதுடன் மேலும் பொலிசார்  வீட்டின் கூரையை சோதனை செய்தபோது அங்கு மறைந்திருந்த அம்பாறை  உகண பகுதி வேரங்கெட்டகொட கிராமத்தைச் சேர்ந்த   இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சந்தேக நபர் போதைப்பொருள் அம்பாறைக்கு போதைப்பொருட்களை  கொண்டு வரும் ஒரு நபர் என  பொலிஸார்  தெரிவித்தனர்.வெளிநாட்டில் வசிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கோதா அசங்கவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு போதைப்பொருள் அனுப்பப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.



மேலும்  சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது  கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்  வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம்  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில்  அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர்  ஈடுபட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


No comments