உலகை அறிவோம் மாணவர்களுக்கான விவாத மேடை !
( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வானது இன்றைய தினம்(27.08.2025) புதன்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் த
சி. உருத்திரராஜா மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த விவாத நிகழ்வில் "இலங்கையின் கலாசாரம் ஏற்புடையது மற்றும் ஏற்புடையதல்ல " எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாதங்களை மிகவும் சிறப்பான முறையில் முன்வைத்திருந்தனர். இவ் விவாத நிகழ்வானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ் விவாத நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், உதவி அதிபர் திருமதி சு. புவிச்சந்திரன், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments