ஹர்த்தால் ஒத்திவைப்பு!!
முத்தையன் கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹர்த்தால் திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
No comments