மட்/மமே/ஆயத்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஆரம்பிப்பு.
நூருல் ஹுதா உமர்
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி அந்த பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மட்/மமே/ஆயத்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உறவுகளின் நிதி உதவியோடு மேலதிக வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கரடியனாறு மட்/மமே/ஆயத்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 30 மாணவர்களுக்கு 5 பாடங்களுக்குரிய ஐந்து ஆசிரியர்களுடன் எதிர்வரும் கல்விப் பொது சாதாரண தரத்தில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
No comments