நிந்தவூர் பகுதியில் 23 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பகுதியில் இன்று(31) மேற்கொள் ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன் போது குறித்த கைதான சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போதுஇ சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக வகை கார் 03 தொலைபேசிகள் 04 வங்கி அட்டைகள் மற்றும் 01 வங்கி புத்தகம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நிந்தவூர் மீரா நகர் ஜும்மா பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய சின்ன தம்பி மொஹமட் றம்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் கட்டளையின் பிரகாரம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments