இன்று மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா! புலமைப் பரிசில் கன்னிச்சாதனை மாணவிகள் கௌரவிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை
அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின்
தலைமையில் நடைபெற்றது.
கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.
உருத்திரமூர்த்தி சபிக்ஷனா என்ற மாணவி 144 புள்ளிகளையும், ராஜு சஞ்ஷனா என்ற மாணவி 146 புள்ளிகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்தனர் .
அவர்களுக்கு, அவுஸ்திரேலியா காரைதீவு ஒன்றிய (ஒஸ்கார் ) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) வேண்டுகோளின் பேரில், அதன் ஸ்தாபக தலைவர் பிரபல கட்டடக் கலைஞர் அரசரெத்தினம் மகேந்திரன் இருபதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். அதனை ஒஸ்கார் இலங்கைப் பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜா சாதனை மாணவிகளுக்கு வழங்கி வைத்தார்.
விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் யசீர் அரபாத், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, முன்னாள் காரைதீவு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரும் அயல் பாடசாலை அதிபர்களாக எஸ்.கிருபைராஜா( கணபதிபுரம்), ஆர்.ஜயசிங்கம்( புது நகரம்)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பவளவிழா சிறப்புரையை ஆசிரியர் எஸ்.உருத்திரமூர்த்தி நிகழ்த்தினார்.
சாதனை மாணவிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
No comments